• Dec 25 2024

எனக்கு வேலையே வேனா அண்ணே மாநாட்டுக்கு போகணும்! எங்க தலைவர் அப்படி சொல்லவில்லை! கொந்தளித்த TVK உறுப்பினர்

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் மாபெரும் மாநாடு எதிர்வரும் 27ம் திகதி மிக பிரமாண்டமாக நடைபெறயுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ரசிகர்கள் tvk உறுப்பினர்கள் எல்லோரும் இணைந்து தீவிரமாக செய்து வருகின்றனர்.  


இந்நிலையில் சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் புஷுலி ஆனந்த் வேலை வேண்டாம் அண்ணன் பொதுக்கூட்டம் போதும் வாங்க என்று கூறியது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பலரும் பலவாறு கருத்துக்களை தெரிவித்துவரும்நிலையில். tvk உறுப்பினர் ஒருவர் இதற்கான தெளிவான விளக்கத்தை மீடியாவிடற்கு கூறியுள்ளார்.


 பொது செயலாளர் வேலையை விட்டுட்டு எல்லாரும் மாநாடு வாங்க என்று சொல்லவில்லை. லீவு போட்டு வாங்கன்னு சொல்ல இல்ல மாநாடு என்பது அக்டோபர் 27 அது  ஞாயிற்றுக்கிழமை இயல்பாவே எல்லா நிறுவனங்களும் விடுமுறையாக தான் இருக்கும் அது என்னென்ன ஒரு பெட்டி  கடையில் வேலை செய்ய கூடிய நம்ம கட்சியை சார்ந்த ஒரு தோழர் ஞாயிற்றுக்கிழமையும் கடை இருக்கு அவர் பொய் அவரோட ஓனர்கிட்ட அனுமதி கேக்கிறார்.  27 ம் திகதி தளபதி வந்து மாநாடு வச்சு இருக்கிறாங்க அந்த மாநாட்டுக்கு குடும்பமா போக போறன் அதனால எனக்கு லீவு வேணும்ன்னு சொல்லும் போது அந்த முதலாளி நான் லீவு தர மாட்டன்ன்னு சொல்லி இருக்கிறார்.


எனக்கு இந்த ஒரு மளிகை கடை இல்லேன்னா பல மளிகை கடை இருக்கு நான் எங்க வேணாலும் வேலைக்கு போவன் எனக்கு வேலையே வேணாம் நான் மாநாட்டுக்கு தான் போவன் அப்பிடின்னு சொல்லிட்டு அந்த தோழர் வந்து முதலாளிட்ட சொல்லி இருக்கிறார். அதை மேற்கோல் காமிச்சு தான் எங்க பொதுச் செயலாளர் வந்து அந்த மேடைல பேசுறாங்க வேலையே வேணாம் எனக்கு என்னோட தலைவன் தான் முக்கியம் என் தளபதி தான் முக்கியம் என் கட்சி தான் முக்கியம்ன்னு சொல்லக்கூடிய அளவிற்கு நம்ம கட்சியில் தோழர்கள் இருக்கிறாங்க அப்பிடி என்றதை மேற்கோல் காமிச்சு பேசி இருக்கிறாங்க.


அதுல என்ன தவறு இருக்கு சரியான முறைல தான பேசி இருக்கிறாங்க தோழர்களை உற்சாக படுத்துறாங்க மாநாட்டுக்கு நீங்க அணி திரண்டு வாங்க குடும்பம் குடும்பமாக வாங்க அப்பிடின்னு சொல்றாங்க. நிறைய நல்ல விஷயங்கள்  சொன்னார்ல  மாநாட்டுக்கு வரும் போது பாதுகாப்பாக வாங்க பஸ்ல வரும் போது பாதுகாப்பா வாங்க, கார்ல வரும் போது ரொம்ப பாதுகாப்பாக வாங்க, பைக்ல வரும் போது ஹெல்மட் அணிந்து வாங்க ,குடிக்க கூடாது மது அருந்தி விட்டு யாரும் மாநாட்டுக்கு வர கூடாது அப்பிடி வந்திங்கன்னா நாங்க மாநாட்டுக்கு உள்ள உட்கார விட மாட்டோம்ன்னு நிறைய அறிவு பூர்வமா சொன்னார்ல அக்கறையா சொன்னார்ல அது குறித்து  ஏன் பேச மாட்டேன்கிறீங்க? அது குறித்து நீங்க ஏன் கேள்வி கேட்க மாட்டேங்கிறீங்க அப்போ அவர் பேசாத ஒன்றை பேசியதாக நீங்க தவறாக சித்தரிக்கிறீங்கல எவ்வளவு ஒரு இழிவான செயல் இதை மிக வன்மையா கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement