• Dec 26 2024

கார்த்தியைப் பார்த்தால் பொறாமையாக இருக்கு, இப்பிடி என்கிட்ட கேட்பாங்க- ஓபனாகப் பேசிய நடிகர் சூர்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!

பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ், வினோத் ஆகியோர் கார்த்தியின் திரைப்பயணத்தை வெற்றிகரமாக மாற்றியவர்கள் என்றே கூறலாம்.

இப்போது கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் ஜப்பான்.இப்படத்தில் நாயகியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். இது கார்த்தியின் 25வது படம் என்பதால் அண்மையில் இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா மிகமு் பிரமாண்டமாக நடைபெற்றது.


இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா, தமன்னா, லோகேஷ் கனகராஜ், பா ரஞ்சித் உள்ளிட்டவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.இதில் பங்கேற்ற சூர்யா, கார்த்தியை பார்த்தால் தனக்கு மிகவும் பொறாமையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

கார்த்தி நடிக்க வந்த பின்பு, தன்னை சந்திக்கும் சிலர் உங்கள் ரசிகன் என்பதை காட்டிலும் உங்கள் தம்பி கார்த்தியின் ரசிகன் என்று கூறும் போது இதை தான் உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். பொதுவெளிகளில் தான் இந்த அனுபவத்தை அதிகமான நேரங்களில் சந்தித்துள்ளதாகவும் சூர்யா குறிபிட்டுள்ளார்.


Advertisement

Advertisement