• Dec 26 2024

அரச பேருந்தில் தொங்கிச் சென்ற மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல்! அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சென்னையில் அரசு பேருந்து ஒன்றின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்களை தாக்கியதாக நடிகை ரஞ்சனா நாச்சியார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தெரியவருகையில், சென்னை குன்றத்தூரில் இருந்து போரூர் வரை சென்ற அரசு பேருந்து ஒன்றில் மாணவர்கள் தொங்கியபடி சென்றதை, அவ்வழியாக காரில் வந்த நடிகையும் வழக்கறிஞருமான ரஞ்சனா நாச்சியார் குறித்த பேரூந்தை தடுத்து நிறுத்தி சண்டை போட்டுள்ளார்.

அதன்படி குறித்த பஸ் டிரைவரிடம், 'இப்படி பஸ்ல தொங்கிக் கொண்டு பிள்ளைகள் வாறாங்க, நீங்க கேக்க மாட்டீங்களா? உங்களுக்கும் பிள்ளை குட்டிகள் எல்லாம் இருக்குல்ல' என கேட்டுக் கொண்டே பஸ்ஸின் பின்பக்கம் சென்ற அவர் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களை இழுத்து வெளியே வீசியுள்ளார்.


அதேவேளை, குறித்த நடிகை ரஞ்சனா மட்டும் அந்த பஸ்ஸை தடுக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் யாராவது விழுந்து காயமோ உயிரிழப்போ ஏற்பட்டிருக்கும். 

இவரது அதிரடி காட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. ஒருப்பக்கம் இவர் செய்ததது சரி எனவும் இன்னொரு பக்கம் பிழை எனவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.


இந்த நிலையில் நடிகை ரஞ்சனா மீது மாணவர்களை தாக்கியதாக ஒரு வழக்கும், டிரைவர், கன்டக்டரை அவதூறாக பேசியதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Advertisement

Advertisement