• Apr 18 2026

இதுவரை லியோ திரைப்படம் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?- அடடே சூப்பர் அப்டேட்டாக இருக்கே...

stella / 2 years ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையை படைத்தது. மேலும் முதல் வாரத்தில் 'லியோ' திரைப்படம் உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக படக்குழு அறிவித்தது.


சமீபத்தில் தான் பிரமாண்டமாக லியோ படத்தின் வெற்றி விழா நடந்தது. விமர்சன ரீதியாக படம் பின்தங்கி இருந்தாலும் கூட வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியடைந்துள்ளது என்று கூறப்படுகின்றது.


இந்நிலையில், உலகளவில் பட்டைய கிளப்பி வரும் லியோ இதுவரை ரூ. 555 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 600 கோடியை லியோ தொடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement