• May 22 2026

யார் மீதும் எனக்கு பாசம் கிடையாது.. - வரலட்சுமி இப்படிப் பேச என்ன காரணம்?

shali / 6 days ago

Advertisement

Listen News!

நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பகிர்ந்த கருத்துகள் ரசிகர்களிடையே பல்வேறு எண்ணங்களை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பேட்டியில் வரலட்சுமி கூறியதாவது, “யாருக்கும் வாழ்க்கை நிரந்தரம் இல்லை என்ற எண்ணம் எனக்கு சிறு வயதிலிருந்தே இருந்தது. அதனால் நான் யாரிடமும் அதிக பாசம் வைத்தது இல்லை. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று யோசித்தால் வாழ்க்கையை வாழ முடியாது. 


யார் என்ன பேசினாலும் பரவாயில்லை. நம்முடைய வாழ்க்கையை நாம் தான் வாழ வேண்டும். பிறரை கஷ்டப்படுத்தாமல், நமக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களை செய்வதில் தவறு இல்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துகள் தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளன. சிலர் அவரது நேர்மையான பார்வையை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். வாழ்க்கையை தனக்கே உரிய முறையில் வாழ வேண்டும் என்ற அவரது எண்ணம் பலருக்கும் ஊக்கமளிப்பதாகவும் கூறப்படுகிறது. 

சினிமா துறையில் தனித்துவமான நடிப்பால் அறியப்படும் வரலட்சுமி, சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி பேசப்படும் பிரபலமாக இருந்து வருகிறார். அவரது இந்த கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் புதிய பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement