• Dec 27 2024

கில்லி Trisha Role-ல நான் நடிக்க வேண்டியது.. அப்போ Love-ல இருந்தன்..! ஷாக் கொடுத்த பிரபல நடிகை

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது வெளியான புது படங்கள் அத்தனையும் தோல்வியை சந்தித்த நிலையில், கடந்த காலத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படங்கள் தற்போது ரீ ரிலீஸ் ஆகி வருகின்றன.

தற்போது 20 ஆண்டுகள் கழித்து இளைய தளபதி விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது.

இதன் முதல் நாள் வசூலை மட்டுமே கிட்டத்தட்ட ஏழு கோடி வரை வசூலித்துள்ளதாகவும் இந்த படம் 600 தியேட்டர்களில் வெளியானதாகவும் தகவல்கள் வெளியானது.


இந்த நிலையில் தற்போது கில்லி படத்தில் திரிஷாவுக்கு பதிலாக நான் தான் நடிக்க இருந்ததாக பிரபல கிரண் ராத்தோட் தெரிவித்துள்ளார் .


2004 ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் அந்த காலத்திலேயே வசூலில் சாதனைப் படைத்துள்ளதோடு, விஜயின் கேரியரில் முதன்முறையாக 50 கோடி வசூலிட்டிய படமாகவும் இது காணப்படுகிறது.

அத்துடன் எட்டு கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு அந்த காலத்திலேயே நடிகர் விஜய் 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். 

தற்போது மீண்டும் கில்லி படம் தியேட்டர்களில் வெளியாகி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த படத்தில் திரிஷாவுக்கு பதிலாக நான் தான் நடித்திருக்க வேண்டும். ஆனால் அப்போது லவ் பண்ணிட்டு இருந்தேன் என  கிரண் ராத்தோட் பிரபல சேனல் ஒன்றுக்கு கூறியுள்ளார். 




 

Advertisement

Advertisement