• Sep 17 2026

'Hi' படத்தை இன்னும் பார்க்கவே இல்ல.. ஏன் தெரியுமா? நடிகை ராதிகா பகீர்.!

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

விஷ்ணு எடவனின் அறிமுக இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘HI’. பாடலாசிரியராக ரசிகர்களிடம் அறிமுகமான விஷ்ணு எடவன், இப்படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ளார். இப்படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் நடிகர் பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்நிலையில், இப்படம் தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் பேசியுள்ள விஷயம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘HI’ திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜுடன் இணைந்து நடித்திருந்த நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்த சில நாட்களிலேயே அவர் உயிரிழந்தார். இதனால் இப்படம் ராதிகாவுக்கு மிகவும் உணர்வுபூர்வமான படமாக மாறியுள்ளது.

இதுகுறித்து பேசிய ராதிகா, தான் இன்னும் ‘HI’ திரைப்படத்தை பார்க்கவில்லை என்றும், அதை பார்க்கும் தைரியம் தனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பாக்யராஜின் மனைவி பூர்ணிமா தன்னை தொடர்புகொண்டு படம் பார்த்து கண்ணீர் விட்டு அழுததாகவும் ராதிகா குறிப்பிட்டுள்ளார்.

பாக்யராஜுடன் தான் இணைந்து நடித்த கடைசி திரைப்படம் இதுதான் என்றும், படப்பிடிப்பு தளத்தில் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். இதனால் ‘HI’ திரைப்படம் தனக்கு வெறும் திரைப்படமாக இல்லாமல், பாக்யராஜின் நினைவுகளை சுமந்து நிற்கும் படைப்பாக இருப்பதாக ராதிகாவின் பேச்சு உணர்த்தியுள்ளது.

Advertisement

Advertisement