• Dec 26 2024

ஜப்பான் படம் ஓடாது என்று எனக்கு அப்பவே தெரியும், இது தான் காரணம்- புதுப் புரளியைக் கிளப்பிய பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கார்த்தியின் 2வது படம் தான் ஜப்பான். இப்படத்தில் கார்த்தியுடன் அனு இம்மானுவேல், விஜய் மில்டன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான ஜப்பான் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி வெளியானது. 

 தீபாவளிக்கு வந்த நான்கு படங்களிலேயே இந்தப் படத்தின் மீதுதான் அதிக எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தார்கள் . எனவே அதிக ஆர்வத்துடன் ரசிகர்கள் படம் பார்க்க முதல் நாள் சென்றனர். ஆனால் இந்தப் படம் கார்த்தி ரசிகர்களையே திருப்திப்படுத்த தவறிவிட்டது. ஒன்லைன் சுவாரசியமாக இருந்தாலும் அதை ராஜுமுருகன் படமாக்கிய விதம் நன்றாக இல்லை என ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார்கள் ரசிகர்கள்.


இந்நிலையில் வலைபேச்சு பிஸ்மி ஐப்பான் படம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்திக் நடிக்கும் ஜப்பான் படம் என்ற அறிவிப்பு வெளியான போது அந்த படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதற்கு காரணம் ராஜு முருகன் ஏன் என்றால் அவர் ஏற்கனவே ஜோக்கர் என்ற படத்தை சமூக அக்கறை கொண்ட படத்தை இயக்கி உள்ளார் என்பதால்.

ஜப்பான் படத்திலும் கார்த்தியை வைத்து ஒரு சமூக அக்கறை கதையை பேசுவார் என்று நினைத்தேன். ஆனால், அதன் பிறகு படம்குறித்து வந்த டீசர், பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்துவிட்டு அந்த படத்தின் மீதான நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது. நகைக்கடையில் கொள்ளை அடிக்கும் நபராக கார்த்திநடித்து இருக்கிறார் என்ற தகவல்கள் வர அந்த படம் ஓடாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன் என்று  பிஸ்மி பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement