• Dec 26 2024

சங்கீதாவ லவ் பண்ணேன்” நான் சங்கி ஆயிடுவேனா? பஞ்சாயத்து முடிஞ்சிருச்சு! மொத்தமா Off பண்ண சந்தானம்!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்த படம் வடக்குப்பட்டி ராமசாமி. அந்த படத்தில் பெரியாரை விமர்சிக்கும் விதமாக காட்சிகள் இருந்ததாக விமர்சனம் எழுந்தது. இந்த படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. அதில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சந்தானம் பதில் அளித்தார்.


வடக்குப்பட்டி ராமசாமி என்பது கவுண்டமணி டைலாக். அதை தான் டைட்டிலாக வைத்தார் இயக்குனர்." "கடவுளை வெச்சி காசு பாக்குறவங்க மேல தப்பு, அதே கடவுள் நம்பிக்கையை வெச்சி அரசியல் பண்றதும், பிரச்சனை பண்றதும் தப்பு என்று தான் காட்டி இருக்கிறோம்" என விமர்சனத்திற்கு சந்தானம் பதில் கொடுத்திருக்கிறார்.


மேலும் நீங்க சங்கி என வந்த விமர்சனம் பற்றி செய்தியாளர் கேட்டதற்கு "நான் 6வது படிக்கும்போது சங்கீதா என்ற பெண்ணை லவ் பண்ணேன், சங்கி சங்கி என்று தான் கூப்பிடுவேன். அதனால் அவர் சங்கி ஆகி விடுவாரா" என நக்கலாக கேட்டிருக்கிறார்.  

Advertisement

Advertisement