• Dec 27 2024

அந்த பணத்தில் தான் மங்கை, ரியல் எஸ்டேட், ஹோட்டல்.. ஜாபர் சாதிக்கின் திடுக்கிடும் வாக்குமூலம்! சிக்கிய திரை பிரபலங்கள்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு விடயம்  தான் ஜாபர் சாதிக்கின் கடத்தல் சம்பவ விவகாரம். இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அளித்த வாக்கு மூலங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் அண்மையில் இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் பொருட்களின் கடத்தல் சம்பவங்களுக்கு முக்கிய மூலமாக இருப்பது ஜாபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று அவர் ஜெய்பூரில் கைது செய்யப்பட்டார்.


இதன்போது,  ஜாபர் சாதிக்கிடம் உயர் அதிகாரிகள் விசாரணை செய்த நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி அவர் கூறுகையில்,

இதுவரை மொத்தமாக 3000 - 3500 கிலோ வரையில் பொருட்களை கை மாற்றம் செய்திருப்பதாகவும், அதனால் கிடைத்த பணத்தை திரைப்படங்களில் முதலீடு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.


குறிப்பாக தமிழில் வெளியான மங்கை திரைப்படம் முழுக்க முழுக்க அந்த பணத்தில் தான் தயாரிக்கப்பட்டது என்றும், அந்த திரைப்படம் மட்டுமின்றி ரியல் எஸ்டேட் தொழிலும் இந்த பணத்தை கொண்டு தான் முதலீடு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கிடைத்த பணத்தை பயன்படுத்தி தான் சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றும் கட்டி இருப்பதாகவும் அவர் கூறிய நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்க போலீசார் முடிவு  செய்துள்ளார்கள்.

அது மட்டும் இன்றி திரையுலகில் இருக்கும் சிலருக்கும் இவருக்கும் இருக்கும் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள சில திரையுலக பிரபலங்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால் பல திரையரங்க பிரபலங்களும் போலீஸ் விசாரணையில் சிக்கவுள்ளனர். 

Advertisement

Advertisement