• Sep 17 2026

தவறான ஒருவரைத் திருமணம் செய்துவிட்டேன்.! பிரதீப் ஆண்டனியின் உருக்கமான பதிவு

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் பிரதீப் ஆண்டனி, தனது திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டு பூஜாவை திருமணம் செய்துகொண்ட பிரதீப் ஆண்டனிக்கு சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை வளர்க்கும் அளவுக்கு தான் பக்குவமானவன் அல்ல என ஆரம்பத்தில் நினைத்ததாகவும், ஆனால் குழந்தை பிறந்த பிறகு அதன் மீது மிகுந்த பாசம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்த கடைசி தருணங்களை தற்போது நினைத்து வருத்தப்படுவதாக கூறியுள்ள பிரதீப், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே குழந்தையை விட்டு பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நல்ல குடும்பத்தை உருவாக்கி, சிறந்த தந்தையாக இருக்க வேண்டும் என்ற தனது கனவு தற்போது தோல்வியடைந்துவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.


மேலும்,  “நான் தவறான ஒருவரைத் திருமணம் செய்துவிட்டேன்”  என குறிப்பிட்டுள்ள அவர், இருவரது வாழ்க்கை முறையும் எண்ணங்களும் முற்றிலும் மாறுபட்டிருந்ததால் தினமும் மோதல்கள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கடந்த உறவால் ஏற்பட்ட பலவீனமான நிலையில் அன்பைத் தேடியதே இந்தத் திருமணத்திற்கு காரணமாக அமைந்ததாகவும் பிரதீப் குறிப்பிட்டுள்ளார். இந்த உறவில் தன்னால் சுதந்திரமாக மூச்சுக்கூட விட முடியாத நிலை ஏற்பட்டதால், பிரிவைத் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, தனது குழந்தைக்கு பெயர் வைக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது தன்னை மிகவும் வேதனைப்படுத்தியதாகவும், தற்போது தனிமையை உணர்வதாகவும் பிரதீப் ஆண்டனி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement