• Dec 26 2024

அப்பவும் அங்க போகாத என்று சொன்னேன்,அது என்னோட சுயநலம் தான்- Emotional ஆகி அழுத Raveena அம்மா

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது  விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியானது 80 நாட்களைக் கடந்துள்ளது. விரைவில் முடியப் போகும் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதை அறிய அனைவரும் ஆவலாக இருக்கின்றனர்.

இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்த நிலையில், அதில் மாயாவின் அம்மா தங்கச்சிக்கு பிறகு ரவீனாவின்   உறவினர்கள் வந்த நிலையில் ரவீனாவின் அம்மா தான் வருவாங்க என்று எதிர்பார்த்தார்கள்.


ஆனால் அவங்களோட சகோதரனும்,அவங்க நண்பரோட அம்மாவும் தான் வந்திருந்தாங்க. அவர்கள் வந்து ரவீனா மீது எந்தக் குற்றமும் இல்லாதது போலவும் மணி தான் ரவீனாவின் கேமை கெடுப்பதாகவும் கூறி விட்டுச் சென்றனர்.இதனால் ரசிகர்கள் பலரும் ரவீனாவைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில்  ரவீனா வீட்டுக்குள்ள அடிக்கடி அவங்க அம்மாவ நினைச்சு அழுவதும் வீட்டை போக போகிறேன் என்டு  சொல்லிட்டு வருகின்ற நிலையில் ரவீனாவின் அம்மா   Emotional ஆகி அழுத வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.


அதில் ரவீனாவின் அம்மா கூறியதாவது ரவீனாவை பிக்பாஸ் வீட்டுக்குள்ள  போகாதன்னு சொன்னேன்" அது என்னோட சுயநலம் தான் 3 மாசம் தனியா விட்டு இருக்கனுமேன்னு ஆனா அவளுக்கு அங்க போகனும்னு நிறைய ஆசை அதனால நான் சரி என்று ஆதரவு தெரிவிச்சனான்.அவள் போகும் போது அவளோட துணிய தந்திட்டு  அத வெச்சு தூங்க சொல்லிட்டு போனாள் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement