90ஸ் காலங்களில் முக்கிய நடிகையான சிம்ரன் சமீபத்தில் தளபதி விஜய்யை நேரில் சந்தித்து பேசியதாகவும், தான் அடுத்து தயாரிக்க இருக்கும் படத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என கேட்டதாகவும், அதற்கு விஜய் முடியாது என பதில் சொல்லிவிட்டதாகும் ஒரு செய்தி பரவியது.
படம் தயாரிப்பது எல்லாம் ரொம்ப கஷ்டம், அதிகம் செலவு இருக்கும் என விஜய் அட்வைஸ் சொன்னதாகவும் முன்னணி பத்திரிக்கையில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அது வதந்தி என சொல்லி சிம்ரன் கடும் கோபமாக இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். "எந்த பெரிய ஹீரோ உடனும் பணியாற்ற நான் காத்து கிடக்கவில்லை. இதுவரை அமைதியாக இருந்தேன். ஆனால் இதுபோன்ற வதந்திகளை இனிமேல் பொறுத்துகொள்ள மாட்டேன்."
"என்னுடைய குறிக்கோள் வேறு, ஒரு பெண்ணாக என்னுடைய எல்லைகள் என்ன என்பது எனக்கு தெரியும். என்னுடைய பெயரை மற்றவர்கள் உடன் இணைத்து வதந்தி கடந்த பல வருடங்களாக பார்க்கிறேன். Stop என சொல்வது பெரிய வார்த்தை தான். ஆனால் அது தான் தற்போது சரியாக இருக்கும்." "இந்த செய்தி உண்மையா என்று கூட யாரும் எனக்கு போன் செய்து கேட்கவில்லை. என்னுடைய உணர்ச்சிகள் பற்றி யாருக்கும் கவலையில்லை.பொய்யான செய்தி பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிம்ரன் குறிப்பிட்டுள்ளார் சிம்ரன்.
Listen News!