• Jun 10 2026

மருத்துவமனையில் இறுதியாக சொன்ன அந்த ஒரு வார்த்தை.? பாரதிராஜாவை நினைத்து கதறி அழும் கமல்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர், “இயக்குனர் இமயம்” எனப் போற்றப்பட்ட பாரதிராஜா (84) காலமானார். உடல்நலக் குறைவால் அவர் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து எமோஷனலான பதிவை பகிர்ந்துள்ளார். அதில், மருத்துவமனையில் அவர் இருந்தபோது நடந்த சந்திப்பை நினைவுகூர்ந்துள்ளார்.

கமல்ஹாசன் கூறியதாவது, மருத்துவமனையில் இருந்த பாரதிராஜாவை சந்தித்தபோது, அவர் விரைவில் குணமடைந்து வீட்டுக்கு திரும்ப வேண்டும் என தெரிவித்ததாகவும், அதற்கு பாரதிராஜா சிரித்தபடி “Okay, see you later for sure” என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.


அந்த நிமிடங்களை நினைவுகூர்ந்த கமல்ஹாசன், அது அவருடன் கடைசியாக நடந்த உரையாடலாக இருக்கும் என்று அப்போது நினைக்கவில்லை என்றும், இப்போது அந்த நினைவுகள் மிகவும் வலியை ஏற்படுத்துகின்றன என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பாரதிராஜாவின் மறைவுக்கு பிறகு திரையுலகினர் பலரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் உள்ளனர். கமல்ஹாசன் முதல் ராதிகா உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement