தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது 26-வது திரைப்படமான ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரித்து வருகின்றன.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார். மேலும் நடிகர்கள் பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றி வருகிறார்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. கருமாத்தூர் தெய்வங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படம் ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த கிராமப்புற பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில், ‘சேயோன்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து இந்த ஆண்டுக்குள் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தத்தில், கமல் தயாரிப்பு, மதுரை பின்னணி, புதிய கூட்டணி ஆகிய காரணங்களால் ‘சேயோன்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
From passion to progress#Seyon First Schedule Wrapped
#சேயோன்#VetrivelVeeravel #Varendi#KamalHaasan #Sivakarthikeyan@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Dir_SivakumarM @Music_Santhosh #BhagyashriBorse @RKFI @turmericmediaTM @raichalrabecca @Actor_ArulDass @bala_actor pic.twitter.com/daiiv22Nvh
Listen News!