• Jan 12 2025

150 வயசு மட்டும் நான் நடிப்பேன்.. அதற்கு காரணம் இது தான்! சரத்குமார் சொன்ன சீக்ரெட்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ். ரவிக்குமாரின் RK Celluloids  நிறுவனம் தயாரிக்கும் ஹிட் லிஸ்ட் படத்தை இயக்குனர் கே.கார்த்திகேயன், சூரியக்கதிர் இணைந்து இயக்கி உள்ளார்கள்.

இந்த படத்தில் கௌதம் மேனன், சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட், சரத்குமார், கே.எஸ் ரவிக்குமார், அபிநக்ஷத்ரா, ஐஸ்வர்யா தாத்தா, சித்தாரா, அபிநயா, முனிஸ்கான் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து .உள்ளார்கள்.

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதன்போது பேசிய சரத்குமார், நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் தினமும் உடற்பயிற்சி செய்வது தான். இயக்குனர் மிஷ்கின் பேசும்போது அனைவரும் இறுக்கமாக இருந்தீர்கள். இது சந்தோஷமான ஒரு குடும்ப விழா என்றார்.


மேலும், சூரியவம்சம் 2 பண்ணலாம் என்று திட்டம் போட்டோம். ஆனாலும் அது சரியாக அமையவில்லை. சூரியவம்சம் 2, 3, 4 எதுவாக இருந்தாலும் எனக்கு 150 வயசு ஆனா கூட நான் நடிப்பேன். 

அதன்பின் இதைக் கேட்ட பத்திரிகையாளர்கள்  சரத்குமார் 150 வயசு வரை வாழ்வார் என்று செய்தி போடுவார்கள் என்று கூறிய அவர், ஆனாலும் அதுவும் சந்தோசம் தான் என்றார்.


Advertisement

Advertisement