• Apr 16 2026

தமிழ் சினிமாவை காப்பாத்த வர்றேன்.. வெற்றி மாறன் சார் தான் டார்கெட்.! திவாகர் பேட்டி

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் தனித்துவமான பேச்சால் பெயர் பெற்ற வாட்டர் மெலன் திவாகர், சமீபத்தில் ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று செய்தியாளர்களை சந்தித்து, ரசிகர்களையும், பொது மக்களையும் வியக்க வைக்கும் வகையில் உரையாற்றியுள்ளார். இவர் கூறிய உரையாடல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


திவகர் பேட்டி ஒன்றில், தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்கள் வெளியேறி உள்ள நிலைமையை எடுத்துரைத்தார். அவர் அதன்போது, “அஜித் சார் ரேஸுக்கு போய்ட்டாரு, விஜய் சார் அரசியல் போய்ட்டாரு, சூர்யா சார் மும்பைக்குப் போய்ட்டாரு. அடுத்து இந்த தமிழ் சினிமா உலகை யாரு காப்பாத்தப்போறா அப்படி இருக்கிற நிலைமையில…only one star வாட்டர் மெலன் திவகரோட என்ட்ரி இருக்கு.” என்று கூறியுள்ளார். 

இதன் மூலம், திவகர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்பதை அறியமுடிகிறது. அத்துடன், திவகர் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் வெளிப்படையாகப் பகிர்ந்தார். அதன்போது, “நான் இன்னும் single-ஆ இருக்கன். எனக்கு நல்ல ஒரு மனைவியைக் கொடுங்க… என்பதற்காக தான் இந்த அம்மன் கோவிலுக்கு வந்திருக்கன்.” எனவும் தெரிவித்திருந்தார். 

இது திவகரின் தனிப்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக காணப்படுகின்றது. மேலும், திவகர் தனது பேட்டியில், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றுவதற்கான தற்போதைய எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்துள்ளார். 

அதாவது, “இயக்குநர் வெற்றி மாறன் சார் கண்டிப்பாக என்னை வைத்துப் படம் எடுப்பார்.” எனவும் கூறியுள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement