• Jan 10 2025

இனி ரேஸிங்கில் தான் என் முழுக்கவனம்; படங்களில் நடிக்க மாட்டேன்! அஜித் அதிரடி பேட்டி

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரான அஜித்குமார் துபாயில் நடைபெற உள்ள '24 எச் மற்றும் ஐரோப்பிய 24 எச் சாம்பியன்ஷிப் கார் ரேஸ்' போட்டியில்  பங்கேற்றுள்ளார். இந்த போட்டிக்கு முன்பு நடந்த கார் ரேஸ் பயிற்சியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார்.

இதன் போது எதிர்பாராத விதமாக அவர் ஓட்டிய ரேஸ் கார் விபத்துக்குள்ளாகி கடுமையான சேதத்துடன் சுழன்று நின்றது. இதில் காரின் முன் பக்கம் முற்றிலும் சேதமடைந்தது. ஆனாலும் காரில் இருந்த அஜித்துக்கு எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பியதாக கூறப்பட்டது.

d_i_a

இந்த நிலையில், அஜித்குமார் பைக், கார் ரேஸ் முடியும் வரை சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று தற்போது வழங்கிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

அதன்படி அவர் கூறுகையில், 18 வயசுல இருந்து பைக் ரேஸில் ஈடுபட்டு வருகின்றேன். சினிமாவில் பணியாற்றியதால் சில காலம் பங்கேற்க முடியல. 2022 ஆம் ஆண்டு 32 வயதானபோது மீண்டும் மோட்டார் ரைசிங்கில் ஈடுபட்டேன். கார் ரேசிங்கிலும் ஈடுபட்டேன். இந்தியால நடந்த ரேசிங்கிலும் பங்கேற்றேன்.


2023 ஃபார்முலா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றத்துடன் அந்த ஆண்டு முழுவதும் நடந்த தொடர்களிலும் கலந்து கொண்டேன். அதன் பின்பு 2024 இல் பிரிட்டிஷ் ஃபார்முலா மூன்று ரேசிங்கில் பங்கேற்று இருந்தாலும் துரதிஷ்டவசமாக அதனை முழுமையாக முடிக்க முடியவில்லை. இதனால் சில காலம் காத்திருந்தேன்.


2010 ஆம் ஆண்டு ஐரோப்பிய பார்முலா இரண்டு சீசனில் பங்கேற்றாலும், சினிமா காரணமாக சில ரேஸ்களில் மட்டும்தான் பங்கேற்க முடிந்தது. தற்போது மீண்டும் இந்த துறையில் ஈடுபட விரும்புகின்றேன். 

ஒரு வீரராக மட்டுமல்லாமல் அணியின் உரிமையாளராக சாதிக்க விரும்புகின்றேன். இதனால் ரேஸிங் சீசன் இருக்கும் அக்டோபர் மாதங்களில் படங்களில் நடிக்க மாட்டேன். பிறகு அடுத்த சீசன் ஆரம்பிக்கும் மார்ச் வரை படங்களில் நடிப்பேன் என்று அஜித் குமார் தற்போது பேட்டி வழங்கியுள்ளார்.

Advertisement

Advertisement