• Dec 25 2024

Vichitra -க்கு நான் ஒரு call கூட பண்ணல.. பண்ணவும் மாட்டன்! எல்லாமே game காக தான்!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்குபற்றி, டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற அர்ச்சனா தற்போது பேட்டியளித்த விடயங்களில் சில வைரலாகி வருகின்றது.

அதன்படி பிக் பாஸ் வீட்டில் விசித்ரா, தனக்கு ஆரம்பத்தில் பாதுகாப்பாக இருந்ததாகவும், பிறகு அவர் தவறான பேச்சுக்களை கேட்டு மாறிவிட்டார் எனவும் கூறியுள்ளார். அதன்படி அவர் மேலும் கூறுகையில்,

விசித்திரா அம்மா மட்டும்  எனக்கு ஆரம்பத்தில் துணையாக இல்லாமல் இருந்து  இருந்தால் நான் அப்போதே உடைந்து போய் இருப்பேன். இந்த அளவுக்கு இறுதி வரை வந்து வெற்றி பெற்றிருக்க மாட்டேன். பிக் பாஸ் வீட்டில் எனக்கு அவ்வளவு  துணையாக இருந்தார். 


ஆனால் அதற்குப் பிறகு ஒரு சிலருடைய பேச்சைக் கேட்டு மனம் மாறிட்டாங்க. அந்த நேரத்தில் விசித்திரா அம்மாவிடம் தான் அவரைப் பற்றி புறம் கூறியதாக தவறாக சிலர் கூறியுள்ளனர். ஆனால் விசித்ரா அம்மா நினைத்து  இருந்தால் அதை ஒரு செகண்டில் வந்து என்னிடம் நேராகவே கேட்டிருக்கலாம். ஆனால் அப்படி அவர் கேட்கவில்லை.

பிக் பாஸ் வீட்டுல மாயா, பூர்ணிமா செம ஜாலியா இருப்பாங்க. ஒரு கட்டத்தில விசித்ரா மேம் அவங்க கூட சேர்ந்துட்டாங்க. இப்ப பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு தினேஷ், கூல் சுரேஷ், பூர்ணிமா, விஜய், விஷ்ணு, நிக்சன் என எல்லாருமே போன் பண்ணாங்க.

ஆனா விசித்ரா மேடம் மட்டும் இன்னும் போன் பண்ணல.நானும் அவங்களுக்கு போன் பண்ண மாட்டேன். ஏன்னா, அவங்க இப்போ என்ன மனநிலையில் இருக்காங்கன்னு தெரியல. அப்படி அவங்க போன் பண்ணி பேசினா, நான் கட்டாயமா நேர்ல போய் சந்திப்பேன் என்று சொல்லியுள்ளார் அர்ச்சனா.

Advertisement

Advertisement