• Dec 26 2024

வாய்ப்பு் பிச்சை எல்லாம் கேட்டு போகமாட்டேன், பணம் தான் முக்கியம்- பிரதீப் அளித்த காரசாரமான பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது  கடந்த மாதம் அக்டோபர் 1-ஆம் தேதி ஆரம்பமாகியது. இந்த சீசன் தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே அனல்பறக்கும் விவாதங்கள் மற்றும் சண்டைகள் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு மிக்க போட்டியாளராக பிரதீப் இருந்து வந்தார். 

அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது தான் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.கமல் ஹாசனும் தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக பிரதீப்பை வெளியே அனுப்பியதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்த நிலையில் பிரதீப் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் யூ-டியூப் சேனல் ஒன்றிற்கு கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.


இந்த பேட்டியில் பட வாய்ப்பு குறித்து பேசி இருந்த பிரதீப், "என்னால் தயாரிப்பாளர்களிடம் சென்று, எனக்கு திறமை இருக்கிறது. அதனால் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பதற்கு மனது ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி பட்ட வாய்ப்பு பிச்சை எனக்கு வேண்டாம் என கூறி இருந்தார்.

இதைதொடர்ந்து தன்னுடைய காதல் வாழ்க்கை பற்றி பேசிய பிரதீப், நான் இரண்டு பேரை காதலித்துள்ளேன். ஒரு பெண்ணை 7 வருடம் காதலித்தேன். பின்னர் சில காரணங்களால் பிரிந்துவிட்டோம். இப்போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இரண்டாவதாக நான் ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருக்கிறேன். 


அவர் என்னை விட்டு எப்போது செல்வார் என தெரியவில்லை. காரணம் அவருடைய வாழ்க்கையை அவர் வாழ வேண்டும் அல்லவா? நம் இஷ்டத்திற்கு நாம் அவரை இழுத்துச் செல்ல முடியாது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதீப் பணம் தான் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் என்பதை புரிந்து கொண்டேன். எனக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும். பல வேலைகள் செய்து, அதில் வரும் பணத்தை கொண்டு சினிமாவில் முயற்சி செய்வேன்.  என்னை பார்த்து பலர் பைத்தியக்காரனா என நினைத்திருக்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் பைத்தியமாக இல்லை என்றால் சந்தோஷமாக இருக்க முடியாது என பிரதீப் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.



Advertisement

Advertisement