• May 24 2026

கிரிக்கெட் மைதானத்தில் தோனி இல்லன்னா என்ன.? நம்ம தல ஆட்டத்தைப் பாருங்க... அடேங்கப்பா.!

shali / 10 hours ago

Advertisement

Listen News!

நடிகரும் ரேஸருமான அஜித் குமார் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் போது எடுத்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமா உலகில் பிஸியாக இருந்தாலும், தனிப்பட்ட நேரங்களில் விளையாட்டு மற்றும் ரேஸிங் போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவர் அஜித் என்பது அனைவரும் அறிந்ததே. 


அந்த வகையில், சமீபத்தில் அவர் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இணையத்தில் வெளியானதும் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த வீடியோவில் அஜித் பேட்டிங் செய்யும் தருணங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பலவிதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, “தல தோனி பேட்டிங்கை பார்க்க முடியவில்லை, அதனால் தல அஜித் பேட்டிங்கையாவது பார்த்து ரசிக்கலாம்....” என்று நகைச்சுவையாகவும் கமென்ட்ஸ் தெரிவித்து வருகின்றன. இதேபோல், பலரும் அஜித்தின் எளிமையான வாழ்க்கை முறையையும், நண்பர்களுடன் அவர் செலவிடும் நேரத்தையும் பாராட்டி வருகின்றனர்.


மேலும், இந்த வீடியோவுடன் தொடர்புடைய சில புகைப்படங்களும் தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. ரசிகர்கள் அவற்றை மீம்களாகவும், ஸ்டேட்டஸ்களாகவும் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement