• Mar 03 2025

நான் அரசியலுக்கு வந்தால் மக்களுக்காக மட்டுமே வேலை செய்வேன்- ராகவா லாரன்ஸ்..!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, சமூக சேவையிலும் தனக்கென ஓர் அடையாளம் கொண்டு விளங்கும் ராகவா லாரன்ஸ், அரசியலுக்கு வருவதற்கான தன்னுடைய காரணங்களை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில், அவர் அரசியலுக்கு வருவாரா? என்பது குறித்த கேள்விகள் தொடர்ந்தும் எழுந்து கொண்டிருக்கின்றன. 

இதற்கு பதிலளித்த ராகவா லாரன்ஸ் , "நான் அரசியலுக்கு வருவதைப் பற்றி பலர் கேட்கிறார்கள். அரசியல் என்பது அதிகாரத்திற்காக அல்லது பதவிக்காக வரவேண்டிய இடம் அல்ல. அது மக்களுக்கு உதவும் ஒரு சேவைத் துறையாக இருக்க வேண்டும் " என்று கூறினார்.


அத்துடன் மக்களின் நலனே என் இலக்கு என்ற ராகவா லாரன்ஸ் பல ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றார். குறிப்பாக, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுதல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, மருத்துவச் செலவுகளுக்கு உதவுதல் எனப் பல்வேறு வகைகளில் மக்களுக்கு உதவி செய்துவருகிறார். அத்துடன் உழைத்த பணத்தில் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்றார்.

அவரது பேச்சில், "நான் அரசியலுக்கு வந்தால், மக்களுக்காக மட்டுமே வேலை செய்வேன். எத்தனை சவால்கள் வந்தாலும், மக்களுக்கு உதவுவதே என் லட்சியம் என்றதுடன் தன்னலமற்ற சேவையுடன் அரசியலுக்கு வந்தால், அது மக்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும்," எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement