• Dec 27 2024

இப்படியே போனா ஒரேடியா மேல அனுப்பிடுவாங்க போலயே.. உயிர் பயத்தில் விஜயா! ஸ்ருதியின் அதிரடி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம். 

அதில், கிச்சன்ல இருக்கும் மீனாவிடம் பாத்திரம் கழுவிட்டியா? பால் வச்சியா? என வேலைகளை பற்றி விஜயா கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, அங்கு இருந்த முத்து ஏன் அவள் மட்டும் தான் இருக்காளா? வீட்ல இன்னும் 2 பேர் இருக்காங்க தானே. அவங்ககிட்ட சொல்ல மாட்டீங்களா என திட்டுகிறார்.

இதை தொடர்ந்து மீனாவுக்கு மல்லிப்பூ, அல்வாவும் வாங்கி வருகிறார் முத்து. எல்லாரும் தூங்கிய பிறகு அல்வாவை சாப்பிடலாம் என முத்து பார்த்துக் கொண்டிருக்க, கிச்சனில் ஸ்ருதி பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் தண்ணீர் எடுக்க விஜயா செல்ல, விஜயாவும் சேர்ந்து பிரியாணி சாப்பிடுகிறார்.

இதை தொடர்ந்து எல்லாரும் தூங்கியாச்சு என மீனா எழுந்து அல்வா பாக்ஸ டைனிங் டேபிள்ல வைத்துவிட்டு உள்ளே கரண்டி  எடுக்க செல்கிறார். அந்த நேரத்தில் அங்கு வந்த மனோஜ் அல்வாவை பார்த்தவுடன் ரோகிணியே கூப்பிட்டு  இருவரும் மாறி மாறி ஊட்டி விடுகிறார்கள். இதை பார்த்த முத்துவும் மீனாவும் ஒன்றும் செய்ய முடியாமல் அப்படியே விட்டு விடுகிறார்கள்.


அதன் பின் கோபத்தில் முத்து படுத்து விட, நடு ராத்திரியில் முத்து எழும்பி மீனாவை பார்க்க, மீனாவும் தூங்காமல் இருக்கிறார் . அந்த நேரத்தில் விஜயாவுக்கு பிரியாணி சாப்பிட்டது வேலையை  காட்டுகிறது. அவர் வெளியே வந்து நடமாட, மீனாவும் போய் என்னவென்று கேட்க, அவரை சூடு தண்ணி வைத்து தருமாறு சொல்கிறார் விஜயா.

அதன் பின் விடிந்ததும் விஜயாவுக்கு பிரியாணி சாப்பிட்டதற்காக ஏக்கம் வராமல் விஜயா தவித்த்துக் கொண்டு இருக்க, மொத்த குடும்பமும் சுத்தி நிற்க, விஜயா முதுகில் பார்வதி குத்துகிறார். ஆனாலும் அவருக்கு சரி வரவில்லை.

இதன்போது முத்து மீனாவை விஜயாவின் முதுகில் குத்துமாறு  சொல்ல, அவர் அது எப்படி என மறுக்கிறார். ரோகிணியும் தயங்குகிறார். இதன் போது ஸ்ருதி குத்துவதாக செல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement