• Dec 27 2024

விக்னேஷ் சிவன் செயலால் முகம் மாறின யோகிபாபு.. உடனே தல தோனி செஞ்ச தரமான சம்பவம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தல தோனி உடன் விக்னேஷ் சிவன் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுக்கும் போது திடீரென யோகி பாபு முகம் மாறிய நிலையில்,  அதை கவனித்த தோனி அதன்பிறகு செய்த தரமான சம்பவம் குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தல தோனி உடன் இணைந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் விரும்புவார்கள் என்பதும் குறிப்பாக விக்னேஷ் சிவன் தோனியின் தீவிர ரசிகர் என்பதும் தெரிந்தது. அதேபோல் தோனியின் கையால் பேட் பரிசு வாங்கிய யோகி பாபு தோனியின் பக்தர் என்றே சொல்லலாம், அந்த அளவுக்கு அவர் அடிக்கடி தனது சமூக வலைத்தளத்தில் தோனி குறித்து பெருமையாக பதிவு செய்வார்.

இந்த நிலையில் எல்..சி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது அங்கு வந்த தோனியுடன் விக்னேஷ் சிவன் மற்றும் யோகி பாபு இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.  அப்போது தோனியின் அருகில் யோகி பாபு நின்று கொண்டிருந்த நிலையில் திடீரென விக்னேஷ் சிவன் யோகி பாபுவை நகர சொல்லிவிட்டு தோனியின் அருகில் அவர் நின்று கொண்டார்.

இதனால் யோகி பாபு முகமே சோகமாக மாறியது. இதை கவனித்த தோனி, விக்னேஷ் சிவன் அருகில் புகைப்படம் எடுத்துக் கொண்டபின் யோகி பாபுவை அழைத்து விக்னேஷ் சிவன் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரது தோள்களிலும் கையை போட்டு மீண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போதுதான் யோகி பாபு முகம் மகிழ்ச்சியாக இருந்ததை பார்க்க முடிந்தது.

தன்னை விக்னேஷ் சிவன் நகர்த்தியதால் யோகி பாபு முகம் மாறியதை கவனித்த தோனி அவரை திருப்தி செய்யும் வகையில் அவர் அருகிலேயே நின்ற புகைப்படம் எடுத்துக்கொண்ட தரமான சம்பவம் குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



Advertisement

Advertisement