• Apr 07 2026

சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கனும்..! சங்கீதாவுக்கு திடீரென இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தற்போது மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயம் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு. மேலும் இதற்கு காரணம் நடிகை திரிஷா என்ற குற்றச்சாட்டும் தான்.

கடந்த 27 வருடங்கள் அமைதியாக காணப்பட்ட சங்கீதா, திடீரென தனது கணவருக்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், கடந்த ஐந்து வருடங்களாக உணர்வு ரீதியாக தாம் பிரிந்து வாழ்வதாகவும் தெரிவித்து நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.

சங்கீதாவின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில், ஏஜிஎஸ் வீட்டு திருமண நிகழ்வில் விஜய் திரிஷாவுடன் மேட்சிங் உடையில் பூங்கொத்துடன் வந்திறங்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் திரிஷாவும் இந்த விவகாரத்தில் நேரடியாக இழுக்கப்பட்டுள்ளார். அதற்கு பின்பும் அவர்கள் நீல நிற ஆடையில் தனித்தனியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் பேசுபொருளானது.

அடுத்த மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போட்டியிட தயாராகி வரும் விஜய்க்கு இந்த விவகாரம் பெரும் தலையிடியாக காணப்படுவதாக  தவெக நிர்வாகிகள் கவலைப்படுகின்றனர்.


மேலும், சங்கீதா வாழ்நாள் ஜீவனாம்சம் கோரியிருப்பதும் வழக்கை நீண்டு இழுக்க வழிவகுக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த தம்பதியர் மீண்டும் இணைவார்களா என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில்,  விஜய்க்கு நிச்சயதார்த்தம் நடக்கும் முன்பு சங்கீதாவுக்கு அவர் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட் பற்றிய பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் சங்கீதா கூறும்போது, எனக்கு முதன்முதலாக அவர் வைரத்தில் மோதிரம் வாங்கி கொடுத்தார். 

நிச்சயதார்த்தத்துக்கு முன்பு அது நடந்தது. அதற்குப் பிறகும் அடிக்கடி தவறாமல் பரிசுகள் கொடுத்து சர்ப்ரைஸ் செய்வார். பதிலுக்கு நானும் சர்ப்ரைஸ் செய்வேன்...என பழைய பேட்டி  ஒன்றில் விஜய் பற்றி சங்கீதா பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement