• Dec 27 2024

ஹீரோ உட்பட மூன்று பேரை அட்ஜஸ்ட் பண்ணினா மூன்று மடங்கு சம்பளமாம்! நடிகை ஜீவிதா பகீர் தகவல்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலுமே நடித்துப் பிரபலமானவர் நடிகை ஜீவிதா. இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஆபிஸ்' சீரியலிலும், 'கடைக்குட்டி சிங்கம்' உள்ளிட்ட ஒரு சில படங்களில் முக்கியமான ரோல்களில் நடித்திருக்கிறார். 

சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என்கிற ஆசையுடன் உள் நுழைந்த ஜீவிதாவிற்கு, ஆரம்ப காலகட்டத்தில் அட்ஜஸ்மெண்ட் செய்தால் ஹீரோயினாக நடிக்க வைத்து அதிக சம்பளம் தருவதாக இயக்குநர் கூறியிருப்பதை சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கின்றார்.


மேலும், படங்களிலும் நடிக்கத் தொடங்கியிருப்பதால் அங்கு பெண்களுக்கு ஏற்படும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் தான் நடிக்க முயன்ற போது எதிர்கொண்ட பிரச்சனை குறித்து இப்போது பேசியுள்ளார் நடிகை ஜீவிதா.


அதன்படி அவர் கூறுகையில், நான் அந்த படத்தில் நடிக்க வேண்டுமென்றால் மூன்று பேரை அட்ஜஸ்ட்மெண்ட் செய்யவேண்டும் என சொன்னார்கள். அதில் இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோ என அடுத்தடுத்து அட்ஜஸ்ட்மெண்ட் செய்யவேண்டுமாம். அவர்கள் ஒவ்வொருவராக என் அறைக்கு வருவார்களாம்.

அவர்களை அட்ஜஸ்ட் செய்தால் எனக்கு அடுத்த படத்திலும் வாய்ப்பு தருவதாகக் கூறினார்கள். அதற்காக எனக்குப் பேசப்பட்ட சம்பளத்தை விட மூன்று மடங்கு சம்பளமாக தருவதாகக் கூறினார்கள்...எனக் கூறியுள்ளார். 

எனினும், அந்த மூன்று பேர் யார் என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் வெளிப்படையாக தனக்கு நடந்த அத்துமீறல் குறித்து ஜீவிதா வெளிப்படையாக பேசியிருப்பது பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement