• Dec 26 2024

ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தால் ஒழுக்கமான குழந்தையை எதிர்பார்க்க முடியாது! சர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான் வீரர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ராய் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக்குக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.குறித்த சம்பவம் பாகிஸ்தானின் உலகக் கோப்பை தோல்வி குறித்து கூறும்போது போதே ஐஸ்வர்யா ராய் குறித்தும் சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார் அப்துல்.

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்று லீக் சுற்றோடு வெளியேறியது பாகிஸ்தான் அணி. இதை தொடர்ந்து பாகிஸ்தான் அணி மீது கடுமையான விமர்சனங்கள் குவிந்தன.


இந்த நிலையில், இது தொடர்பாக பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக், 'அந்த காலங்களில் யூனிஸ் கான் ஒரு கேப்டனாக ஒரு நல்ல எண்ணம் கொண்டிருந்தார். அது எனக்கு சிறப்பாக செயல்பட நம்பிக்கையை அளித்தது. உண்மையில், பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் எங்களுக்கு இல்லை. நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டு ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்க விரும்பினால்இ அது ஒருபோதும் நடக்காது. நான் பேசுவது உங்களின் எண்ணத்தை பற்றி' என்று அப்துல் ரசாக் பேசினார்.  

இதையடுத்து, தவறான நோக்கத்தில் சொல்லப்பட்ட இந்தக் கருத்தை அடுத்து அப்துல் ரசாக்கை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

Advertisement

Advertisement