• Dec 26 2024

கோட் படத்தை பார்த்தா நீங்க தான் ஆடு... மொத்தத்துல உயிர எடுத்துட்டாங்க..!! கண்டபடி விமர்சனம் கூறிய பிரபலம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்படும் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்த படம் நேற்றைய தினம் உலகளவில் வெளியாகி கலவையான விமர்சனக்களை பெற்று வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏற்கனவே வெளியான மாநாடு திரைப்படம் டைம் லூக் பாணியில் வெளியானது. கோட் படத்திலும் சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தை கையாண்டுள்ளார் வெங்கட் பிரபு. 

இந்த படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான அஜித்தின் மங்காத்தா படத்திற்கு டாப் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதுபோலவே ரசிகர்களும் ஆயிரம் மங்காத்தா போன்றது கோட் என படத்தை கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த படத்தில் முன்னணி நடிகர்களான பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, ஜோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அத்துடன் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், திரிஷா உள்ளிட்டவர்களும் கேமியோ ரோலில் நடித்தது படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


இந்த நிலையில்,  பிரபல சினிமா விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்துள்ளார். மேலும் டி. ஏஜிங் தொழில்நுட்பத்தால் இந்த படத்திற்கு என்ன உபயோகம் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதன்படி கோட் படம் ரொம்ப பழைய கதை.  மொத்தத்துல இந்த படம் எப்படி இருக்குன்னா.. கதையை எடுத்துட்டா ரொம்ப பழைய கதை.. திரைக்கதை அதை விட ரொம்ப மோசம் ...டி. ஏஜிங் டெக்னாலஜி தான் இந்த படத்திற்கு வந்த வினை. படத்தை மூன்று மணி நேரம் எடுத்து உயிர எடுத்துட்டாங்க.. என்னால முடியல.. நீங்க போய் பார்க்கிறதா இருந்தா நீங்க தான் ஆடு என தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Advertisement

Advertisement