• Dec 26 2024

இதோ ஆரம்பிச்சிட்டாருல்ல.. ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படக்குழுவினர்களுக்கு இளையராஜா நோட்டீஸ்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

மஞ்சும்மெல் பாய்ஸ்’ பட குழுவினர்களுக்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறப்படும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் உருவான மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இளையராஜா இசையில் உருவான ’குணா’ படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலி’ என்ற பாடல் பயன்படுத்தப்பட்ட நிலையில் அந்த பாடல் தான் படத்தில் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மஞ்சும்மெல் பாய்ஸ்’ படகுழுவினர் கமல்ஹாசன் உள்பட ’குணா’ படத்தில் பணிபுரிந்த அனைவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்த நிலையில் இளையராஜாவை மட்டும் அவர்கள் சந்திக்காமல் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது இசைஞானி இளையராஜா, மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தில் தனது அனுமதி இன்றி ‘குணா’ பட பாடலை பயன்படுத்தியதாக  படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தில் ‘குணா’ பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பை வழங்க வேண்டும் என்றும் அல்லது பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளதை அடுத்து மஞ்சும்மெல் பாய்ஸ்’படக்குழுவினர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement