Zee Tamil தொலைக்காட்சியின் பிரபல நடனப் போட்டி நிகழ்ச்சியாக உள்ள 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' (Dance Jodi Dance), வாரந்தோறும் ரசிகர்களை அதிரவைக்கும் வகையில் வளர்ந்து வருகின்றது. சிறந்த நடன ஜோடிகள், ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான போட்டிகள் மற்றும் நவீன கலைகளுடன் மேடையை அதிர வைக்கின்றனர்.
அந்த வகையில், இந்த வாரம் நிகழ்ச்சியில் நடக்கும் ‘ONE AND ONE’ எனும் ஸ்பெஷல் டாஸ்க், ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளது. இது ஒவ்வொரு போட்டியாளர்களையும் நேரடியாக மோதவைக்கின்ற சுற்றாக அமைந்துள்ளது. அதன்போது நடுவராக பங்கேற்றிருக்கும் சினேகா, வரலட்சுமி மற்றும் பாபா பாஸ்கர் , இந்த வார நிகழ்ச்சியில் வந்த ஒரு சில ஜோடிகளின் நடனத்தை பார்த்து அப்படியே ஷாக்காகிவிட்டனர்.
அதில், சினேகா ஒரு ஜோடியின் தனிப்பட்ட நடனத்தைப் பார்த்து, “இவங்க ஆடுறதை பாக்க எனக்கே பயமா இருக்கு!” எனக் கூறி திகைத்து விட்டார். அவர், அனைத்து போட்டியாளர்களின் நடன நிகழ்வுகளுக்கும் பாராட்டுகளைத் தெரிவிப்பவர். குறிப்பாக, ஒவ்வொரு ஜோடிக்கும் expressions, energy ஆகியவற்றை சொல்லிக் கொடுப்பவர் அத்தகைய நடுவரை இந்தவார நடனநிகழ்ச்சி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் வரலட்சுமி, “இது தான் சரியான போட்டி. இருவருமே தங்கள் தனித்துவத்தை நிரூபிச்சாங்க!” எனப் பாராட்டினார். இந்த வாரம் ONE AND ONE போட்டி மூலம் ரசிகர்கள் மனதில் அனைத்து ஜோடிகளும் இடம்பிடிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்த வார எபிசோட்டின் புரொமோ வெளியானதிலிருந்து , ‘DJD ONE AND ONE’ என்ற ஹாஸ்டாக் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகத் தொடங்கியது. ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான ஜோடியின் நடனத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
Listen News!