• Dec 26 2024

ஆள விடுங்கடா சாமி! திருமணமே வேண்டாம்! விரக்தியில் ஐஸ்வர்யா லட்சுமி எடுத்த முடிவு!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தனது திருமணம் குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, விஷாலின் ஆக்‌ஷன் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.


அப்படத்தை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது பொன்னியின் செல்வன் தான்.  சமுத்திரக் குமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார் ஐஸ்வர்யா.


அப்படத்துக்கு பின் அவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் 34 வயதாகும் ஐஸ்வர்யா லட்சுமி, திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். நீண்ட யோசனைக்குப் பிறகு தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.


25 வயது வரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டதாகவும், ஆனால் திருமணமான தம்பதிகள் சந்தோஷமாக இல்லாததைக் கண்டு திருமணம் வேண்டாம் என முடிவெடுத்ததாகவும் ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார். இந்த விடையம் தற்போது வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement