• Dec 27 2024

’வடக்குப்பட்டி ராமசாமி’ உட்பட இந்த வாரம் என்னென்ன படங்கள்? ஓடிடி ரிலீஸ் தகவல்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளங்களில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகி வருகிறது என்பதை குறித்து பார்த்து வருகிறோம். சந்தானம் நடித்த ’வடக்குப்பட்டி ராமசாமி’ உட்பட இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாகின்றன என்பதை  தற்போது பார்ப்போம்.

சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற திரைப்படம் நாளை முதல் ஆகா ஓடிடியில் வெளியாக உள்ளது. கடந்த மாதம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,  இந்த படம் ஓடிடியில் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைப்போல் ’நந்திவரம்’ என்ற தமிழ் திரைப்படம் டென்ட்கொட்டா ஓடிடியில் இந்த வாரம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்த இரண்டு தமிழ் திரைப்படங்கள் மட்டுமே இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 
இதையடுத்து கடந்த மாதம் வெளியாகி இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட் ஆன ’ஹனுமன்’ திரைப்படம் ஜியோ சினிமா ஓடிடியில் இந்த வாரம் வெளியாக உள்ளது. அதேபோல் மம்முட்டி நடித்த சூப்பர் ஹிட் படமான ’பிரம்மயுகம்’ என்ற மலையாள திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது என்பதும் அதேபோல் ’ஆட்டம்’ என்ற மலையாள திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் திரையரங்குகளில் பெரிய அளவில் திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்ற நிலையில் ஓடிடியில் ரிலீசாகும் படங்கள்தான் ரசிகர்களுக்கு ஆறுதலை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement