• Dec 27 2024

பொய் சொல்லிதான் இந்திரஜாவை கல்யாணம் செய்தாரா கார்த்திக்? ரோபோ சங்கர் குடும்பத்தினர் அதிர்ச்சி..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

டாப்சி போன்ற அகில இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகைகள் எல்லாம் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் தெரியும் அளவுக்கு திருமணத்தை மிகவும் சிம்பிள் ஆக நடத்திய நிலையில் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திராஜாவின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது.

கோடி கணக்கில் இந்த திருமணத்திற்கு செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் ஒரு பைசா கூட ரோபோ சங்கர் தரப்பிலிருந்து செலவு செய்யவில்லை என்றும் இந்த திருமணத்தில் நிச்சயதார்த்தத்தில் இருந்து ஹனிமூன் வரை அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப விற்பனை செய்த வகையில் கிடைத்த காசு தான் திருமணம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த ஆடம்பர திருமணம் ஒரு பக்கம் வேடிக்கையாக பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கடும் விமர்சனம் செய்யப்பட்டது என்பதும் திருமணம் என்பது ஒரு தம்பதிகளுக்கான தனிப்பட்ட நிகழ்வு என்றும் இதை விற்பனை செய்து வியாபாரம் ஆக்குவது மிகவும் மோசமான ஆரம்பம் என்றும் பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்திரஜாவை திருமணம் செய்த கார்த்திக் தனது சக நண்பர்களிடம் தான் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறேன் என்று கூறிவந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இது குறித்து ’அவன் யார் என்றே எனக்கு தெரியாது, அவனாவது என்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிவதாவது என்று கூறியதாக தெரிகிறது

இதனை அடுத்து தான் ஒரு உதவி இயக்குனர் என்று பொய் சொல்லி ரோபோ சங்கர் குடும்பத்தை ஏமாற்றி கார்த்திக் திருமணம் செய்து விட்டாரா என்ற கேள்வியை விட்டு நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இருப்பினும் உறவினர் மாப்பிள்ளை என்பதால் இதை ரோபோ சங்கர் குடும்பத்தினர் பெரிது படுத்த மாட்டார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement