• Dec 26 2024

மீண்டும் 21 வயது பெண்ணுடன் ஆட்டம் போடும் பப்லு? மறுபடியும் திருமணமா? 57 வயதில் இது தேவையா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர் பப்லு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஷீத்தல் என்ற சிறு வயது பெண்ணுடன் பழக்கத்தில் இருந்தார் என்றும் அதன் பின் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த திருமணம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வெளியான போது நெட்டிசன்கள் பல்வேறு கேலியும் கிண்டலுமான கேள்வியை கேட்டனர்.

ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பப்லு ’பல்லு இருக்கிறவன் பக்கோடா திங்குறான்’ என்ற ரீதியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் திடீரென பப்லுவை அவருடைய மனைவி என்று சொல்லப்பட்ட ஷீத்தல் பிரிந்து விட்டதாகவும் இருவருக்கும் என்ன பிரச்சனை என்பது குறித்து யாருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.



ஆனால் இது குறித்து இருவருக்கும் நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்த போது ஷீத்தல் தான் பப்லுவை பிரிந்து விட்டதாகவும் பப்லு அவரை தொடர்பு கொள்ள முயன்றும் அவரது எண்ணை பிளாக் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவெனில் பப்லு மீண்டும் ஒரு 21 வயது பெண்ணுடன் சுற்றி வருவதாகவும் மாடல் அழகியான அந்த பெண் லிவிங் டுகெதர் முறையில் பப்லுவுடன் வாழ முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னையை சேர்ந்த அந்த மாடல் அழகி உடன் எத்தனை நாள் அல்லது எத்தனை மாதங்கள் இருப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  இந்த 57 வயதில் கூட பப்லுவுக்கு இன்னும் இளமை ஆட்டம் குறையவில்லை என்றும் இந்த வயதில் இது தேவையா என்றும் கேள்வி எழுப்பு வருகின்றனர். ஆனால் பப்லு தரப்பில் இதுகுறித்து கூறியபோது இது முழுக்க முழுக்க பொய் என்றும், எந்த மாடல் அழகியுடனும் பப்லு உறவில் இல்லை என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement