• Dec 27 2024

சூர்யாவுக்கு ஷாக் கொடுத்த விஜய்.. நீயெல்லாம் என் பக்கத்தில் வர கூட தகுதியில்லை..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா தான் நடித்து வரும் ’கங்குவா’ படத்தை வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் சரியாக அதே தேதியை விஜய் தேர்வு செய்து சூர்யாவுக்கு ஷாக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா நடித்து வரும் ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் ’கோட்’ படம் ஆகஸ்ட்டில் வெளியாகும் என்று தகவல் வெளியான நிலையில் ’கங்குவா’ படத்தை செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிடுவது தான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இதை எப்படியோ மோப்பம் பிடித்து தெரிந்து கொண்ட விஜய் தரப்பு செப்டம்பர் 5ஆம் தேதி ’கோட்’ படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளது தான் சூர்யா தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சூர்யா இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கிறார் என்பதும் இந்த படம் வெற்றி பெற்றால் தானும் விஜய் ரேஞ்சுக்கு வந்துவிடலாம் என்ற மனப்பால் குடித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் விஜய்யோ, ‘ரஜினி ரேஞ்சுக்கு நான் சென்று விட்டேன், நீ எல்லாம் என் பக்கத்தில் கூட வர முடியாது என்பதை நிரூபிப்பதற்காக தான் அவர் செப்டம்பர் 5 தேதியை தேர்வு செய்திருப்பதாகவும் முடிந்தால் மோதிப்பார் என்ற மறைமுக சவால் தான் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 10 மொழிகள் மற்றும் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட ’கங்குவா’ திரைப்படத்தை விஜய்யின் 'கோட்’ படத்துடன் மோதுவதற்கு சூர்யா முடிவு எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement