• Dec 25 2024

அப்பாவையே தூக்கி சாப்பிட்ட இனியா.. இடிந்து போன ராதிகா.! ரணகளமான வீடு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கமலா ராதிகாவிடம் பாக்கியாவும் கோபியும் சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வந்ததாக காட்டுகின்றார். அதன் பின்பு கோபி வர இப்போ உங்களுக்கு சந்தோஷமா? நான் வெளியவே போகக்கூடாது என்று திட்டம் போட்டுட்டீங்களா? உங்களை பார்த்து தான் உங்க பிள்ளைகள் வளரும். 

உங்களுக்கு பாக்கியா ரெஸ்டாரண்டில் விஷத்தை கலக்க எப்படி மனசு வந்துச்சு? அந்த குற்ற உணர்ச்சி கூட கொஞ்சம் இல்லை என பேசி விட்டு செல்லுகின்றார். மறுபக்கம் இனியா காலேஜில் நடந்த பிரச்சனைகளை வைத்து அவருடைய நண்பர்கள் கிண்டல்  செய்கின்றார்கள். மேலும் இனியாவை கூப்பிட்டு செல்ஃபி எடுக்கின்றார்கள்.

d_i_a

இதனால் வீட்டுக்கு வந்த இனியா காலேஜில் நடந்தவற்றை பற்றி சொல்லி அழுததோடு நீ எதற்காக அப்பாவோட சண்டை போட்டாய் என பாக்கியாவை திட்டுகின்றார். ஆனாலும் ஜெனி ஆண்டி பக்கம் என்ன தப்பு இருக்குது என்று கேட்க, அதை எதுவுமே கேட்காமல் நீங்க சண்டை போடுறதால நாங்க தான் பாதிக்கப்படுகிறோம் என்று பேசிவிட்டு செல்கின்றார்.


இதைத் தொடர்ந்து தான் அப்பாவை பார்க்க செல்வதாக ராதிகா வீட்டுக்கு செல்லுகின்றார். அங்கு கமலா உங்க அம்மா வேவு  பார்க்க அனுப்பினாவா? என்று பற்றி தப்பாக பேசுகின்றார். இதனால் கோபப்பட்ட இனியா அம்மாவை பற்றி தப்பாக பேச வேண்டாம். இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் ராதிகா தான் என்று சொல்கின்றார்.

அங்கு வந்த ஜெனியும் பாக்கியாவின் குடும்பம் ரொம்ப சந்தோஷமா இருந்தது. உங்களால தான் அந்த சந்தோஷம் இல்லாம போனது. இப்ப தினம் தினம் பிரச்சனையா இருக்கு என்று ராதிகாவை குத்தி காட்டி பேசிவிட்டு இனியாவை கூட்டிவிட்டு செல்லுகின்றார். இதனால் ராதிகா இடிந்து போய் உட்கார்ந்துள்ளார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement