• Dec 27 2024

இனியா எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியின் உச்சத்தில் பாக்கியா! ஈஸ்வரி சொன்ன முடிவு

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், எல்லாரையும் விட்டு போகப்போவதாக லெட்டர் எழுதி வைத்துவிட்டு அதனை பாக்கியா அருகில் வைக்கும் போது தண்ணி பாட்டில் தட்டுப்பட்டு கீழே விழ பாக்கியாவும் எழுந்து விடுகின்றார்.

இதனால் இனியா என்ன செய்வது என்று தெரியாமல் தண்ணி குடிக்க வந்தேன் நீ தூங்கு என சமாளிக்க, பாக்கியா இனியாவின் கையில் இருந்த லெட்டரை பார்த்து விடுகின்றார்.

அது என்ன என கேட்கவும் இனியா காட்ட மறுக்கின்றார். இறுதியில் ஒரு மாதிரி அதை வாங்கி வாசித்த பாக்கியாவுக்கு அதிர்ச்சி கிடைக்கின்றது. இதை பார்த்ததும் பாக்கியா இனியாவிடம் என்ன காரியம் செய்து வைத்திருக்கிறாய் என அழ, வெளியில் இருந்த ஜெனியும் சத்தம் கேட்டு உள்ளே வந்து விடுகின்றார்.

இதன் போது திட்டினதுக்காக இனியா செத்துப் போவதாக லெட்டர் எழுதி வைத்திருக்கிறார் என்று சொல்லி அழ, இனியாவுக்கு நீ இல்லையென்றால் நான் சந்தோசமாகவாயிருப்பேன் நானும் செத்துப் போயிடுவேன் என பாக்கியா தனது நிலைமையை சொல்லி புரிய வைக்கின்றார். இதனால் தான் இனி  எந்த தப்பும் செய்ய மாட்டேன், தப்பான  முடிவெடுக்க மாட்டேன் என இனியா  சத்தியம் செய்து கொடுக்கின்றார்.


இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என பாக்கியா ஜெனியிடம் சொல்லுகின்றார். மறுநாள் காலையில் காபி போட்டுக் கொண்டிருக்கும் போது பால் பொங்குவதையும் கவனிக்காமல் பாக்கியா நின்று கொண்டிருக்க, அங்கு வந்த ஈஸ்வரி என்ன நடந்தது என விசாரிக்கவும் இனியா செய்த வேலையை சொல்லி அழுகின்றார் பாக்கியா.

மேலும் தான் ரெஸ்டாரண்டை விட்டுவிட்டு வீட்டிலேயே சின்னதா எதுவும் பண்ணட்டுமா எனக் கேட்க, வேண்டாம் நாங்க வீட்டில் இருந்து இனியாவை பார்த்துக் கொள்கிறோம். இனியா இனி ஒரு தப்பும் பண்ண மாட்டா நீ பிசினஸ்ச பாரு என ஈஸ்வரி நம்பிக்கை கொடுக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement