• Dec 28 2024

துபாயில் இர்பானுக்கு கிடைத்த ராஜமரியாதை... ஒரே இடத்தில் ஒன்றுகூடிய நட்சத்திரங்கள்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

உணவு சார்ந்த ரிவ்யூ வீடியோக்கள் மூலம் யூடியூப்பில் பிரபலமானவர் தான் இர்பான். தற்போது தமிழ் யூடியூப்பர் வரிசையில் முதன்மையான இடத்திலும் அதிகம் சம்பாதிக்கும் யூடியூப்பர் ஆகவும் இவர் திகழ்ந்து வருகின்றார்.

இவர் பிரபலமாக காணப்பட்ட போதும் அண்மையில் இவரது சொகுசு கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்த சர்ச்சையில் இருந்து வெளி வரவே அவருக்கு நீண்ட நாள் எடுத்திருந்தது.

இதை தொடர்ந்து சமீபத்தில் தனது மனைவி கர்ப்பத்தில் இருப்பது பெண் குழந்தை என்று துபாயில் பரிசோதனை செய்து தெரிவித்து இருந்தார். இதனால் நீதிமன்ற வழக்கில் சிக்கி அதன் பிறகு மன்னிப்பு கேட்டு அந்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருந்தார்.


இந்த நிலையில் துபாயில் கிராண்ட் ஓபனிங் செய்யப்பட்ட பார்க் (Baraak) என்ற ரெஸ்டாரண்டிற்கு இர்பான் சென்றபோது அவருக்கு ராஜ மரியாதை கொடுத்து வரவேற்கப்பட்டுள்ளார். தற்பொழுது குறித்த சம்பவத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

குறித்த ரெஸ்டாரன்ட் ஒப்பனிங்கிற்கு இர்பான் மட்டுமின்றி முன்னணி நடிகர்கள் பலரும் வருகை தந்து உள்ளார்கள்.


Advertisement

Advertisement