• Dec 28 2024

மாமனார் மீது கடும் கோபத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராய்? இதுதான் விவாகரத்துக்கு காரணம்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் ஐஸ்வர்யா ராய். இவர், தமிழில் மட்டும் இல்லாமல் இந்தி, மலையாளம், கன்னடம் என பலமொழிகளில் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா நடித்த தமிழ் படங்களில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

2007 ஆம் ஆண்டு அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஆராத்யா என்ற மகள் உள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்  தம்பதியினரின் விவாகரத்து பற்றிய விடயங்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலானது. அதன் பின்பு இருவரும் ஜோடியாக இருந்த புகைப்படத்தை பகிர்ந்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

ஆனால் அண்மையில் நடந்த அம்பானி வீடு திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் தனியாக வந்திருக்க, அபிஷேக் பச்சன் தனது பெற்றோருடன் வந்திருந்தார். இதனால் இருவரின் விவாகரத்து செய்தியும் சூடு பிடித்தது.


இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், நான் ஐஸ்வர்யா ராயத்தான் திருமணம் செய்வேன் என்று அபிஷேக் பச்சன் அடம் பிடித்ததால் தான் அமிதாப் இந்த கல்யாணத்திற்கு ஓகே பண்ணினார்.

ஐஸ்வர்யா ராய் கல்யாணத்திற்கு முதலே விவேக் ஓப்ராய், சல்மான் கான் போன்ற நடிகர்களுடன் உறவில் இருந்தார். இதனால் அமிதாப்புக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. ஆனாலும் மகனுக்காக இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.

தற்போது ஐஸ்வர்யாராயும் அபிஷேக் பச்சனும் பிரிய முக்கிய காரணமே சொத்து பிரச்சனை தான். மும்பையில் பெரிய பணக்காரர்கள் வசிக்கும் ஜூஹூ பகுதியில் இருக்கும் பெரிய வீட்டை தனது மகளுக்கு கொடுத்து விட்டார் அமிதாப்.

இதன் காரணத்தினாலே ஐஸ்வர்யா ராய் மாமனார் மீது மிகுந்த கோபத்தில் உள்ளார். இதனால் சண்டை ஏற்பட்டாலும் ஒரே வீட்டில் ஐஸ்வர்யா ராய் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்து வருகின்றார்.

அது மட்டும் இன்றி அபிஷேக் இன்னொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவும் காரணம் என கூறியுள்ளார் பயில்வான்.

Advertisement

Advertisement