• Dec 25 2024

மாமன்னன் பட நடிகையின் காதலர் இவர் தானா? ரொம்ப ஹாண்ட்சமா இருக்காரே..!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளியான சாட்டை படத்தில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக அறிமுகமானவர்தான் ரவீனா ரவி. இவர் பல படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். அதன் பின்பு இறுதியாக மாமன்னர் படத்தில் தனது எதார்த்தமான நடிப்பில் அசத்தியிருப்பார்.

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளான அமைரா தஸ்தூர், காஜல் அகர்வால், எமி ஜாக்சன், மடோனா செபாஸ்டியன், மாளவிகா மோகனன், ராஷி கன்னா மற்றும் தீபிகா படுகோன் ஆகிய பல நடிகைகளுக்கு இவர் டப்பிங் பேசியுள்ளார்.


இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலரை அறிமுகப்படுத்தி உள்ளார் ரவீனா ரவி. அதன்படி வாலாட்டி என்றால் நாய் படத்தை இயக்கிய இயக்குனர் ஜெயக்குமார் என்பவரை காதலித்து வருவதாக தற்போது பலருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது மேலும் இவர் மாமன்னன் படத்தில் மட்டும் இல்லாமல் ஒரு கிடாயின் கருணை மனு, ராக்கி, வீரமே வாகை சூடும், லவ் டுடே போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

Advertisement