தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிளாஸ்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் அர்ஜூன், அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்ஷன் மையமாக உருவான இந்த படத்தில் தனது பெயருக்கு ஏற்ப வலுவான ஆக்ஷன் ரோலில் அவர் நடித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அர்ஜூனின் குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் ஏற்கனவே திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் தொடர்பான தகவல் கவனம் பெற்றுள்ளது. அஞ்சனா சினிமாவிலிருந்து விலகி தனிப்பட்ட தொழில் வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். அவர் அமெரிக்காவில் வசிக்கும் இசையா என்ற நபரை கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் அர்ஜூன், தனது இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். இத்தாலியில் கடந்த ஆண்டு இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் கூறியுள்ளார்.
மேலும், பெற்றோர் என்பது குழந்தைகளுக்கு பின்னால் இருந்து ஆதரவாக இருக்கும் தூணாக இருக்க வேண்டும். இதனை தனது தந்தையிடமிருந்து இந்த மதிப்பை கற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது மகள் தனது காதலை பகிர்ந்தபோது ஆரம்பத்தில் யோசனை இருந்தாலும், பின்னர் அவரது முடிவை மதித்து ஆதரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Listen News!