• Dec 26 2024

முத்துவுக்காக்க வரிசைகட்டி வந்த வண்டிகள்... மீனாவுக்கு அடித்த ஜாக்பாட்! கும்மாங்குத்து வாங்கிய ரவுடிகள்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், இப்போ 500 மாலைகளும் வரவில்லை என்றால் உங்களை சும்மா விட மாட்டேன் அப்படி என்று தலைவர் மிரட்டுகிறார். முத்து எவ்வளவு சொல்லியும் அவர் புரிந்து கொள்ளவில்லை. நீ எந்த எதிர்க்கட்சி ஆள் என்று சொல்லி மிரட்டுகிறார்.

இதைத்தொடர்ந்து முத்துவும் மீனாவும் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் முத்து மாலையுடன் வண்டியில் எடுத்த போட்டோவை தனது வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்பி தனது நண்பர்களிடம் நடந்தவற்றை சொல்லி, குறித்த வண்டியை பார்த்தால் தகவல் அளிக்குமாறும்  சொல்லுகிறார்.

இவ்வாறு முத்து அனுப்பிய மெசேஜை பார்த்த ஒருவர், அந்த வழியாக குறித்த வண்டி போவதை பார்த்து அதனை பின்தொடர்கிறார். அதன் பின் முத்துவுக்கு சொல்ல முத்து விழுந்தடித்து அந்த இடத்திற்கு வருகிறார். முத்துவுக்காக வரிசை கட்டி ஆட்டோ, கார்கள் எல்லாம் வருகின்றன. கடைசியாக வண்டியை பிடித்து விடுகின்றனர்.


அதன் பின்பு குறித்த டிரைவரை முத்து சரமாரியாக அடிக்க இன்னும் ஒருவர் வந்து அவருடன் பிரச்சனை பண்ணுகின்றார். அதை தொடர்ந்து முத்துவுக்காக டிரைவர்கள் வருவதை பார்த்து அவர்கள் தெறித்து ஓடுகிறார்கள். அதன்பின் சரியான டைமுக்கு மாலைகளை கொண்டு போக வேண்டும் என்று மீனாவை அழைத்துக் கொண்டு வண்டியில் செல்கிறார் முத்து.

மறுபக்கம் முத்துவிடமிருந்து தப்பித்து வந்த ரவுடிகள், சிட்டியிடம் நடந்தவற்றைச் சொல்ல, சிட்டி அவர்களை அடிக்கிறார். மேலும் தனது பெயரை சொல்லியதாக என கேட்க, அவர்கள் உங்கட பெயரை சொல்லவில்லை என்று சொல்கிறார்கள்.

தலைவர் வீட்டுக்குச் சென்றதும், முதலில் அவரை பிடித்து வைக்கிறார். ஆனால் மீனா நடந்தவற்றை சொல்ல முதலில் நம்ப மறுத்த தலைவர் அதன் பின்பு நம்புகிறார். அப்ப இது எதிர்க்கட்சி வேலை தான். நான் பார்த்துக் கொள்வதாக கூறுகிறார்.

இதை தொடர்ந்து மீனாவுக்கு பணத்தை கொடுத்துவிட்டு முத்துவுக்கும் தனது மானத்தை காப்பாற்றியதற்காக 5000 கொடுக்கிறார் தலைவர்.

இதை அடுத்து மீனாவுடன் வேலை பார்த்த பெண்களுக்கு பணம் கொடுக்க மீனாவும் முத்துவும் சென்ற போது, அவர்கள் பணத்தை வாங்க மறுக்கிறார்கள். மேலும், மீனா நம்ம வீட்டுல ஒரு பொண்ணு. நாங்க காசுக்காக வரல மீனாவுக்காக தான் வந்தோம் என்று சொல்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசோட்

Advertisement

Advertisement