• Dec 26 2024

ஐந்தே படங்கள் தான்.. பர்த்டே பேபி லோகேஷ் கனகராஜூக்கு இத்தனை கோடி சொத்துக்களா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரை உலகில் வெறும் 5 படங்கள் மட்டுமே இயக்கி முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள லோகேஷ் கனகராஜ் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 5 படங்கள் மட்டுமே இயக்கிய லோகேஷ் கனகராஜ் சொத்து மதிப்பு குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1986 ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி கிணத்துக்கடவு என்ற பகுதியில் லோகேஷ் கனகராஜ் பிறந்தார்.  வங்கியில் சாதாரண வேலை பார்த்துக் கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ்-க்கு இயக்குனராக மாற வேண்டும் என்று லட்சியம் இருந்த நிலையில் அவர் ஒரு கட்டத்தில் வங்கி பணியை ராஜினாமா செய்து விட்டு சினிமா வாய்ப்புகளை தேடினார். லோகேஷ் மனைவியும் வேலை பார்த்து கொண்டிருந்தார் என்பதால் குடும்பத்தில் பொருளாதார பிரச்சனை இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில்மாநகரம்என்ற திரைப்படத்தை இயக்கி தான் ஒரு திறமையான இயக்குனர் என்பதை கோலிவுட்டில் உறுதி செய்த நிலையில் தான்கைதிதிரைப்படத்தை இயக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அவருக்கு அடுத்த படமே தளபதி விஜய் நடித்தமாஸ்டர்அதன் பின் கமல்ஹாசன் நடித்தவிக்ரம்ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கியலியோதிரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது.



இந்த நிலையில் அடுத்ததாக அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்பதும் இந்த படத்திற்காக அவருக்கு ஒரு பெரும் தொகையை சம்பளமாக கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் LCU என்ற ட்ரெண்ட்டை ஆரம்பித்து வைத்த லோகேஷ் கனகராஜுக்கு 80 கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு படங்களுக்கு அவருக்கு மிகவும் குறைவான சம்பளம் கிடைத்தாலும்மாஸ்டர்படத்திற்கு ஓரளவு நல்ல சம்பளம் கிடைத்தது என்றும் அதன் பிறகுவிக்ரம்மற்றும்லியோபடத்திற்கு மிகப்பெரிய சம்பளம் கிடைத்தது என்றும் கூறப்பட்டது

லியோபடத்திற்கு மட்டும் அவர் 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில் அடுத்ததாக ரஜினி நடிக்க இருக்கும்தலைவர் 171’ படத்திற்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசி இருப்பதாகவும் தெரிகிறது. ‘பைட்கிளப்உள்பட ஒரு சில திரைப்படங்களை தயாரித்து உள்ள லோகேஷ் இடம் தற்போது 80 கோடி ரூபாய் நிகர சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement