• Dec 25 2024

இது பிக் பாஸா? இல்ல பைத்தியக்கார ஹாஸ்பிடலா? மீண்டும் வெடித்த கலவரம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது வைக்கப்பட்டுள்ள ஸ்கூல் டாஸ்க்கில் போட்டியாளர்கள் முட்டி மோதி வருகின்றார்கள்.

இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

இதை தொடர்ந்து நான்கு போட்டியாளர்கள் எலிமினிட்டாகி வெளியே சென்றார்கள். மேலும் ஆறு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன் ஆகியோர் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

d_i_a

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கம் போலவே ஸ்கூல் டாஸ்க் வைக்கப்படும். அதுபோலவே இந்த முறையும் ஸ்கூல் டாஸ்க்  வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் பல முரண்பாடுகள் எழுந்துள்ளன. நேற்றைய தினமும் சௌந்தர்யா, பக்கத்துல உட்கார்ந்தால் லவ்வா என கத்து கத்தென கத்தி இருந்தார்.


இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான முதலாவது ப்ரோமோவில் ஸ்கூல் டாஸ்க்கில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. இதை பார்த்த இணையவாசிகள் இது ஸ்கூலா இல்ல பைத்தியக்கார ஹாஸ்பிடலா என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

மேலும் இந்த ஸ்கூல் டாஸ்க்கில் தர்ஷிகா கோவப்பட்டு  வெளியேறுகின்றார். அங்கிருந்த ஏனைய மாணவர்கள் எல்லாரும் பிரின்சிபல் மேம் சாரி கேட்க வேண்டும் என்று போராட்டம் பண்ணுகின்றார்கள்.

Advertisement

Advertisement