• Dec 27 2024

மனைவியைப் பிரிஞ்சாச்சு என்பது உண்மைதானா?- விவாகரத்து பிரச்சினைக்கு விளக்கம் கொடுத்த மதன் கௌரி

stella / 11 months ago

Advertisement

Listen News!

 யூடியூப் என்ற சமூக வலைத்தளத்தின் மூலம் மக்களிடையே பிரபல்யமானவர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வரிசையில் மிகவும் முக்கியமானவர் தான்  மதன் கௌரிமக்களுக்கு அதிகம் தெரிந்திடாத பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை, மிகவும் தெளிவாக விவரித்து வீடியோ வெளியிடுவது மதன் கௌரியின் ஸ்பெஷல். 

ஆரம்ப காலத்தில், இவரது வீடியோக்கள் மீது சில விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து பல விதமான தகவல்களுடன் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றார். இவர்  யூடியூப் சேனல் தொடங்கியதற்கு முக்கிய காரணமே காதல் தோல்வி தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.


அத்தோடு இவர் தனது காதலி நித்யாவையே அண்மையில் திருமணமும் செய்து கொண்டார். திருமணம் நடந்த வீடியோவை மதன்கௌரி தனது யூடியூபில் வெளியிட்டு இருந்தார்.அண்மையில் மதன்கௌரி சென்னையில்வாங்கிய வீடு குறித்து ஹோம் டூர் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். 

அந்த வீடியோவில் அம்மா, தங்கை குறித்து பேசி இருந்தார். ஆனால், தனது மனைவி குறித்து அவர் எதுவுமே பேசாததால் இருவரும் பிரிந்து விட்டதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவியது. இதுகுறித்து  மதன் கௌரி நேற்று தனது யூடியூப் சேனலில் முதல் முதலாக பேசி உள்ளார்.


 அதில், கடந்த ஓராண்டாக என் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று பல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. உண்மையில் நான் குடும்ப வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை என்றால் நானே முதலில் உங்களிடம் சொல்லுவேன். ஏன் என்றால் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்தது நீங்கள் தான் என்றார். இதனால், இணையத்தில் வரும் தகவல்களை யாரும் நம்பாதீங்க என்று மதன் கௌரி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement