• Dec 26 2024

முதன்முறையாக சின்ன மருமகளுக்கு எதிராக திரும்பிய விஜயா? ஸ்ருதியை சரமாரியாக கிழித்த ரவி? முத்து செய்த காரியம்?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அண்ணாமலைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட, மீனா அவரை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு செல்கிறார். போகும் வழியில் முத்துவுக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல, முத்து பதறிக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்று அண்ணாமலையை பார்க்கிறார்.

மேலும் டாக்டரிடம் அண்ணாமலை பற்றி முத்து விசாரிக்க, சரியான டைமுக்கு அவரைக் கொண்டு வந்ததால் காப்பாற்றியதாக டாக்டர் சொல்கிறார்.


அதன்பின் அங்கு விஜயா, மனோஜ், ரவி ஆகியோர் வர, விஜயா வந்தவுடன் மீனாவை திட்டுகிறார். மீனா நடந்த உண்மையை எடுத்து சொல்ல முனையவும் அவர் விடவில்லை.

இதற்கு அடுத்து அங்கிருந்த ரவியிடம் முத்து கோவமாக கத்துகிறார். அன்னைக்கே சொன்னேன், திருட்டு கல்யாணம் பண்ணிட்டு வந்து இப்படி செய்றீங்களா? உங்களால தான் பிரச்சனை என்று அவர்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியே போகுமாறு ரவியிடம் முத்து சொல்கிறார்.

இதைக் கேட்ட அண்ணாமலையும் மீனாவும் முத்துவை சமாதானம் செய்ய முற்பட, விஜயாவும் ரவியிடம் ஏன்டா இந்த பொண்ணு என் பேச்சை கேக்குதே இல்லை.. ஏற்கனவே சொன்னது தானே.. இப்படி கொசு மருந்து அடிக்க  வேண்டாம் என்று சொல்லி பேசுகிறார்.

இதைத் தொடர்ந்து அண்ணாமலையை வீட்டுக்கு கூட்டிட்டு வரும்போது, இன்னைக்கே டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்களா? அப்போ சின்ன பிரச்சனை தானா? என்பது போல ஸ்ருதி கேட்க, கோவப்பட்ட முத்து அப்போ பெரிய பிரச்சனையாகும் என்று நினைச்சியா?  என ஸ்ருதியை திட்டுகிறார்.


அதற்கு ஸ்ருதி, அப்படி இல்லை.. ஈவினிங் ஆன ரொம்ப கொசுவா இருக்கு.. டெங்கு, ஃபீவர் வரும் அதனால தான் எல்லாருக்கும் நல்லது என்று ஸ்பிரே அடிச்சன் என்று சொல்கிறார்.

அதற்கு, நீ வாரத்துக்கு முதல் நாங்க எல்லாம் நல்லா தான் இருந்தோம் அப்படி என்று முத்து சொல்லுகிறார்.

இதைத்தொடர்ந்து அண்ணாமலையை தமது ரூமில் வந்து தங்குமாறு முத்துவும் மீனாவும் கட்டிலை உள்ளே போட்டு ரூமை ரெடி பண்ணி கொடுக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் அப்பாக்கு இப்படி ஆனதுக்கு நீ தான் காரணம் என ரவி ஸ்ருதியிடம் சண்டை போடுகிறார். இந்தக் கோபத்தில் அண்ணாமலையிடம் போய் ஸ்ருதி தெரியாமல் பண்ணிட்டேனு மன்னிப்பு கேட்கிறார்.

அதற்கு அவரை சமாதானம் செய்து அனுப்பிய விஜயா, ரவியிடமும் அவளை சமாதானம் செய்யுமாறு சொல்லி அனுப்புகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.




Advertisement

Advertisement