• Dec 26 2024

அர்ச்சனா போலவே ஜாக்குலின் ஓரம்கட்டப்படுகிறாரா? பிக் பாஸில் நடப்பது என்ன?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பிக்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக ஒலிபரப்பாகி வருகின்றது. இதுவரை இடம்பெற்ற ஏழு சீசன்களையும் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த சீசனில் முதல் முறையாக இந்த முறை விஜய் சேதுபதி களமிறங்கி உள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பிக்கப்பட்டு நான்கு நாட்களை கடந்த நிலையில், இனி வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் சேதுபதி எப்படி தொகுத்து வழங்க உள்ளார் என்பதையும் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு சொல்லப்போகின்றார் என்பதை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக காணப்படுகின்றார்கள்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக சென்றுள்ள ஜாக்குலின் கடந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்து டைட்டிலை வின் பண்ணிய அர்ச்சனா போல தனிமைப்படுத்தப்படுகின்றாரா என்று பிரபல விமர்சகர் ஜோ மைக்கேல் கேள்வி எழுப்பி உள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், கடந்த சீசனில் அர்ச்சனா ஓரம் கட்டப்பட்டதை போல ஜாக்குலிலும் ஓரம் கட்டப்படுகின்றாரா? இல்லை அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு உள்ளாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஜாக்குலின் பிக் பாஸ் வீட்டில் ஏதும் பிரச்சினை நடைபெற்றால் தானே இன்னொருவரை கூப்பிட்டு அழுது புலம்புவதாகவும் பிறரால் தாக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஜாக்குலின்  உண்மை முகம் இதுதானா அல்லது போட்டிக்காக விளையாடுகின்றாரா என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement