• Oct 26 2024

பிளடி பெக்கர் படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு தானா? ரொம்ப கம்மியாச்சே..!

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் இளம் நடிகரான கவின் நடிப்பில் பிளடி பெக்கர் திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

பிளடி பெக்கர் திரைப்படத்தில் நடிகர் கவின் யாசகர் கேரக்டரில் நடித்துள்ளார். இதற்காக உண்மையாகவே அவர் தெருவில் பிச்சை எடுத்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதன்போது ஒரு அக்காவிடம் பிச்சை கேட்க அவர் 20 ரூபாய் கொடுத்ததாகவும் அதன் பின்பு அவர் ஷூட்டிங் சென்றதாகவும் தெரிவித்து இருந்தார்.

கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட், டாடா, ஸ்டார் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதிலும் டாடா  திரைப்படம் கவினின் புகழை உச்சிக்கே கொண்டு சென்றிருந்தது. இந்த படம் இவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. இதன்பின்பே கவினுக்கு நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.


இந்த நிலையில், ப்ளடி பெக்கர் படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்த நிலையில் படத்திற்கு யூஏ சான்றிதழ் அளித்துள்ளார்கள். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 136 நிமிடங்கள் மட்டும் எனவும் அதாவது இரண்டு மணி நேரம் 16 நிமிடங்கள் மட்டுமே என தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான படங்களிலேயே மிகக் குறைந்த ரன்னிங் டைம் கொண்ட படம் இதுவாக காணப்படுகின்றது.

இந்த படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ் ராஜ், சுனில் சுகதா, டி எம் கார்த்திக், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


Advertisement