பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் 80 மற்றும் 90 காலங்களில் பிரபல பாடகராக திகழ்ந்தவர். கடந்த சில காலங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடகர் ஜெயச்சந்திரன். 80 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயச்சந்திரன் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
பாடகர் ஜெயச்சந்திரன் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அனைவருக்கும் பிடித்தமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தார். இவரது பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கும்படி அமைந்துள்ளன. இந்நிலையில் மறைந்த பாடகர் ஜெயச்சந்திரன் குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!