விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இனியா ஹாலில் உட்கார்ந்து கொண்டு மேக்கப் பொருட்களை பரப்பி வைத்துவிட்டு ஒன்றொன்றாக எடுத்த மேக்கப் போட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார். கொஞ்ச நேரத்திலேயே இனியாவிற்கு ஃபோன் வர போன் பேச வெளியே சென்று விடுகிறார்.
அந்த நேரம் பார்த்து மயூ வந்து சேரில் உக்கார மேக்கப் பொருட்களை பார்த்து ஆசைப்பட்டு எடுத்து மேக்கப் போட்டுக் கொள்கிறார். உடனே வந்த இனியா "எதுக்கு மயூ என்னோட பொருள் எல்லாம் யூஸ் பண்ற" என்று கேட்கிறார். "இல்லகா ஆசையா இருந்தது அதனால தான் யூஸ் பண்ணுனேன்" என்று சொல்ல "ஒருத்தர் யூஸ் பண்ணது இன்னொருத்தர் எப்படி யூஸ் பண்றது? நான் ட்ரை பண்ணுது பண்ணாதது என இரண்டு வகையா பிரிச்சு வச்சிருந்தேன்" என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.
இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரி உடனே வந்து மயூவை திட்ட ஆரம்பிக்கிறார் "உனக்கெல்லாம் அறிவே இல்லையா மத்தவங்க பொருளை இப்படித்தான் கேட்காமல் எடுத்து யூஸ் பண்ணுவியா" என்று திட்ட குடும்பத்தில் இருக்கும் அனைவரும் வந்து விடுகின்றனர் உடனே பாக்யா "என்னாச்சு என்ன விஷயம்?" என்று கேட்க ஈஸ்வரி "உடனே மேக்கப் பொருட்களை எடுத்து மேக்கப் போட்டுட்டு கீழே போட்டு உடைத்து சோபால தடவிட்டால்" என்று இல்லாததை எல்லாம் சொல்லி பழி போடுகிறார்.
உடனே பாக்கியா இனியாவிடம் என்ன நடந்துச்சு என விசாரித்து பிரச்சினையை முடித்து வைக்கிறார். நீ ஜெனியுடைய மேக்கப் பொருட்கள் யூஸ் பன்னுறமாதித்தான் மயூவும் செய்தா மயூகிட்ட மன்னிப்பு கேளு" என்று சொல்லுகிறார். உடனே இனியா சாரி மயூ என்று சொல்ல, ராதிகாவும் மயூவிடம் மத்தவங்க பொருளைக் கேட்காமல் எடுக்கிறது தப்பு உனக்கு மேக்கப் ஐட்டம் வேணும்னா என்கிட்ட கேட்டு இருக்க வேண்டியதுதானே என்று திட்டுகிறார்.பின்னர் இனியாவிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார்.
மறுபக்கம் பாக்யாவும் செல்வியும் வெளியில் வேலை பார்த்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க ராதிகா டிவி ஆன் பண்ணி பாட்டு வைக்கிறார். பாட்டு சத்தம் கேட்டு இனியா வெச்சிருப்பா என்று நினைத்துக் கொண்டு ஈஸ்வரி வெளியில் வந்து பார்க்க ராதிகாவை பார்த்து அதிர்ச்சியாகி" எதுக்கு இவ்ளோ சத்தமா பாட்டு வச்சிருக்க" என்று கேட்டு சண்டை போடுகிறார். ராதிகாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கோபி வருகிறார். உடனே கோபி கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் என்று சொல்ல ஈஸ்வரி செழியனுக்கு போன் பண்றேன் என்று சொல்லுகிறார் அதற்குள் ராதிகா கோபியை அழைத்து சென்று விடுகிறார்.
Listen News!